மஹா அக்பர்- Part 1
இந்திய மக்களுக்கு மஹா அக்பரை பற்றி நன்றாக தெரியும்.
ஆனாலும் நாம் இங்கே கட்டுரை எழுத வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் ஹிந்து தளத்திலே அக்பரின் புகழின் மீது புழுதி வாரி இறைக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதுவும் எப்படி? மூல நூலை எழுதிய புண்ணியவானாவது ” Who says Akbar is Great” என்று கேள்வியை தலைப்பாக வைத்து இருக்கிறார்.
அதை மொழி பெயர்க்கும் நமது சகோதர தமிழ் கனவான்களின் மொழி பெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் “யார் சொன்னது மஹா அக்பர் என்று?” என்றோ, அல்லது “மஹா அக்பர் என அழைப்பது சரியா?” என்றோ தலைப்பு வைத்திருந்தால் சரியான மொழி பெயர்ப்பாக இருந்திருக்கும்.
ஆனால் எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். “அக்பர் என்னும் கயவன்” என்று !
இதுவா இலக்கண நேர்மை? இதுவா இலக்கிய பண்பாடு ? முதல் வாக்கியமே இப்படி இருக்கிறதே, தமிழத்தில் வன்மம் நிறைந்த சிந்தனை தொடர்கதை யாகுமோ என்கிற ஆதங்கம் உங்களுக்கு எழுகிறதா?
அக்பரின் சிறப்புகளை நாம் தொடர்ந்து எழுதுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக